கள்ளக்குறிச்சியில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை; வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சியில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Update: 2023-06-18 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதில் நேற்று முன்தினம் 98 டிகிரி அளவில் வெயில் பதிவாகி இருந்தது. இதற்கிடையே, வங்க கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அந்த வகையில், நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது. வானம் மேக கூட்டங்களுடன் இருந்தது. தொடர்ந்து சுட்டெரித்த வெயிலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்த வானிலை நிகழ்வு சற்று நிம்மதியை தந்தது.

தொடர்ந்து, மதியம் 1 மணிக்கு மேல் கள்ளக்குறிச்சி பகுதியில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. கூடவே குளிர்ந்த காற்றும் வீசியது. இந்த மழை சிறிது நேரம் நீடித்தாலும், அவ்வப்போது சாரலாக பெய்து வந்தது. இதேபோன்று மாவட்டத்தில் பிறப்பகுதிகளிலும் மழை அவ்வப்போது பெய்து வந்தது.

இந்த மழையின் காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்