தேசிய நெடுஞ்சாலையோரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தேசிய நெடுஞ்சாலையோரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-14 18:20 GMT

இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை கிருஷ்ணகிரி கோட்டம் சார்பில் வேலூரை அடுத்த மேல்மோணவூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, கிருஷ்ணகிரி கோட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் அதிபதி, பொறியாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சென்னை -பெங்களூரு சாலையோரம் நிழல்தரும் மரங்களான அத்தி, பூவசரம், வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர். மேல்மோணவூரில் இருந்து பள்ளிகொண்டா சுங்கச்சாவடி வரையிலான சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு மேலாளர் ஐஸ்டின் சாம்சன், வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்