பராமரிப்பு பணி: குருவாயூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வழித்தடம் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Update: 2024-09-18 01:22 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

மதுரை -திண்டுக்கல் ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற அக்டோபர் மாதம் 8-ந்தேதி வரை என்ஜினீயரிங் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு -செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் -16845) ரெயில் இன்று (புதன்கிழமை) முதல் அக்டோபர் மாதம் 7-ந்தேதி வரை திண்டுக்கல் -செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டை -ஈரோடு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்- 16846) 19-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை செங்கோட்டை -திண்டுக்கல் வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் திண்டுக்கல் -ஈரோடு இடையே வழக்கமான நேரத்தில் இயக்கப்படும்.

செங்கோட்டை -மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் -16848) நாளை முதல் 7-ந்தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். கள்ளிகுடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ஊர்களுக்கு போகாது.

குருவாயூர் -சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16128) வருகிற 23-ந்தேதி, 25, 26, 27-ந்தேதி மற்றும் அக்டோபர் மாதம் 2, 3-ந்தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்.

நாகர்கோவில் -மும்பை எக்ஸ்பிரஸ் (16352) வருகிற 26-ந்தேதி மற்றும் அக்டோபர் 3-ந்தேதி ஆகிய இரு நாட்கள் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி -அவுரா எக்ஸ்பிரஸ் (12666) அதிவிரைவு ரெயில் 28-ந்தேதி மட்டும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்க்கப்படும்.

நாகர்கோவில் -கச்சிகுடா எக்ஸ்பிரஸ் (16354) 28-ந்தேதி மட்டும் திண்டுக்கல்லில் இருந்து நேரடியாக கரூர் மார்க்கமாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்