மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

மூடப்பட்ட குவாரிகளை திறக்கக் கோரி மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-10-05 19:30 GMT

மூடப்பட்ட குவாரிகளை திறக்கக் கோரி மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணல் குவாரிகள்

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணையன் வரவேற்று பேசினார். பொருளாளர் சந்திரன், துணை செயலாளர் செல்வம், துணைத்தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் தன்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ள மணல் குவாரிகளை திறக்க வேண்டும். தரம் இல்லாத எம்.சாண்ட் நிறுவனங்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வைத்தனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது. தமிழக அரசு மணல் குவாரிகளை திறந்தது. சில காரணங்களால் தற்காலிகமாக குவாரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் 5 லட்சம் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் 5 லட்சம் கட்டுமான தொழிலை சார்ந்தவர்கள் என 10 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதித்து உள்ளன.

மாநிலம் முழுவதும் ஒரு நாளைக்கு கட்டுமான தொழிலுக்கு 45 ஆயிரம் யூனிட் மணல் தேவைப்படுகிறது. எனவே தமிழகம் முழுவதும் அதிக மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்