மணல் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் உள்பட 2 பேர் பலி

மணல் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் உள்பட 2 பேர் பலி

Update: 2023-05-24 20:00 GMT

திருவையாறு அருகே மணல் லாரி-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

மாணவர்-டிரைவர்

தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த அந்தணர்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அர்ஜூணன்(வயது 19). இவர் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே தெருவை சேர்ந்த சிவானந்தம் மகன் பாலசுப்பிரமணியன்(23). இவர் கதிர் அடிக்கும் எந்திர டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று அர்ஜூனன், பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் தஞ்சை மாரியம்மன் கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சப்ளையராக வேலை செய்தனர். பின்னர் அங்கிருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் திருவையாறுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

விபத்தில் 2 பேரும் பலி

அப்போது திருவையாறில் இருந்து தஞ்சை நோக்கி மணல் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. கண்டியூரை அடுத்த அரசூர் மெயின் ரோடு புறவழிச்சாலை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், மணல் லாரியும் நேருக்கு நேர் ேமாதிக்கொண்டன.

இதில் படுகாயம் அடைந்த அர்ஜூனன், பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லிமேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் லாரி-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்