மணல் கடத்தல்; 3 பேர் கைது
பேராவூரணி அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து மினி வேன்களை பறிமுதல் செய்தனர்.;
பேராவூரணி:
பேராவூரணி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேராவூரணி அருகே நாட்டாணிக் கோட்டை பகுதியில் வந்த 2 மினி வேன்களை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். இதில் அந்த வேன்களில் மணல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் பேராவூரணியை சேர்ந்த நீலகண்டன் (வயது29), பட்டத்துரணி பகுதியைச் சேர்ந்த முரளிதரன் (21), சாணாகரை பகுதியைச் சேர்ந்த பிரபு (30) என்பதும், இவர்கள் மணலை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலகண்டன், முரளிதரன், பிரபு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மினிவேன்களையும் பறிமுதல் செய்தனர்.