விளை நிலங்களில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது

விளை நிலங்களில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது

Update: 2023-02-27 18:45 GMT

திருவாரூர் மாவட்டம் மணலி கிராமத்தில் விளை நிலங்களில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது என்று நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுவரொட்டிகள்

திருவாரூர் நகரம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் விளைநிலங்களில் மணல் அள்ள அனுமதிக்காதே என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் மத்திய, மாநில அரசுகளே மணலி கிராமத்தில் குவாரி அமைத்து மணல் அள்ள அனுமதிக்க வேண்டாம். மேலும் விவசாயத்தையும், அடுத்த தலைமுறையின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது என்று மணலி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,

திருவாரூர் மாவட்டம் திருக்கொட்டாரம் ஊராட்சி மணலி பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக விளைநிலங்களில் இரண்டு மணல் குவாரிகள் அமைத்து மணல் அள்ளி உள்ளனர். இதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு உப்பு நீர் உள்ளே புகுந்துள்ளது.

குவாரி அமைக்க கூடாது

இதனால் விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த முறை விளை நிலங்களில் மணல் குவாரி அமைக்க கூடாது. மேலும் மணலி பகுதியில் மணல் குவாரி அமைக்க கூடாது என கோரி முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, கனிமவளப்பிரிவு, திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் என பல இடங்களில் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே திருவாரூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தற்போது விளை நிலங்களில் மணல் குவாரி அமைக்க சிலர் எடுத்து வரும் முயற்சியை தடைசெய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்