வந்தவெளி கருப்பசாமி கோவில் ஆடி திருவிழா

வந்தவெளி கருப்பசாமி கோவில் ஆடி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-08-10 19:00 GMT

கடவூர் அருகே சிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற வந்தவழி கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி பக்தர்கள் காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சாமிக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, தேன் உள்பட பல்வேறு வாசனை பொருட்களால் அபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 500 கிடாய்களை வெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடா்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்