அரியலூரில் விமானம் விழுந்ததாக வதந்தி: பொதுமக்கள் பீதி
அரியலூர் மாவட்டம் குழுமூர் பகுதியில் விமானம் ஒன்று விழுந்ததாக பொது மக்கள் மத்தியில் வதந்தி பரவியது.
பெரும்பலூர்,
அரியலூர் மாவட்டம் குழுமூர் பகுதியில் விமானம் ஒன்று விழுந்ததாக பொது மக்கள் மத்தியில் வதந்தி பரவியது. இதனால், பீதியடைந்த மக்கள், அந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதனை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி மறுத்துள்ளார். அந்த இடத்திற்கு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர். பயிற்சி விமானம் ஏதேனும் வனப்பகுதியில் விழுந்ததா? என பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தேடி வருகின்றனர்.