உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-10-23 13:33 GMT

சென்னை பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் முத்துக்கிருஷ்ணன் என்பவர் நேற்று இரவு பணி முடிந்து சென்றுள்ளார். அப்போது சென்னை எம்ஜிஆர் நகரில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் பள்ளத்தில் உள்ள இரும்பு கம்பிகள் முத்துக்கிருஷ்ணனின் உடலில் குத்தி படுகாயம் அடைந்தார்.

உடனே படுகாயமடைந்த முத்துக்கிருஷ்ணனை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரடியாக இராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை அளிக்குமாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பல மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையின் இன்று சிகிச்சை பலனின்று உயிரிழந்ததுள்ளார். சென்னை மாநகர் முழுவதும் இதுபோன்ற பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

"தனியார் தொலைக்காட்சி ஊழியர் முத்துகிருஷ்ணன் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், பத்திரிகையாளர் குடும்ப உதவி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்