மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசு பஸ் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நீலகிரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசு பஸ் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2024-08-16 15:26 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கெங்கரை-1 கிராமத்தில் இன்று (16.08.2024) காலை சுமார் 06.10 மணியளவில் கூட்டாடாவிலிருந்து கோத்தகிரி நோக்கி நான்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ் கோவில்மட்டம் என்னும் இடத்தில் வந்துகொண்டிருந்தபோது உயர் மின்அழுத்தக் கம்பி பேருந்தின்மீது உரசிய விபத்தில் நான்கு பயணிகள் மற்றும் நடத்துநர் பேருந்து படிக்கெட்டின் வழியாக கீழே இறங்கி தப்பித்த நிலையில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அரசு பஸ் டிரைவர் பிரதாப் (வயது 42) த/பெ. தேவராஜ் என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில், உயிரிழந்த அரசு பஸ் டிரைவர் பிரதாப் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்