ஓமன் நாட்டுக் கடல் பகுதியில் உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஓமன் நாட்டுக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும்போது உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-10-12 09:50 GMT

சென்னை,

ஓமன் நாட்டுக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும்போது உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, ஏழுதேசம் சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் எல்.லெரின்ஷோ, த/பெ. கிளாரன்ஸ் என்பவர் 9-9-2023 அன்று ஓமன் நாட்டின் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த மீனவர் எல்.லெரின்ஷோவின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்