தொழிலாளி வீட்டில் ரூ.1¾ லட்சம் நகை-பணம் திருட்டு

குறிஞ்சிப்பாடி அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1¾ லட்சம் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-10-14 18:45 GMT

குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விருப்பாட்சியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று காலை தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். மேலும் அவர்கள் வீட்டில் இருந்த 2 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.1¾ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்