தொழிலாளியிடம் வழிப்பறி செய்த 5 பேர் சிக்கினர்

ஆறுமுகநேரி அருகே தொழிலாளியிடம் வழிப்பறி செய்த 5 பேர் சிக்கினர்

Update: 2023-02-22 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பேயன்விளை மேலதெருவை சேர்ந்த மகாராஜன் மகன் சுடலைமுத்து (வயது 34). இவர் குரும்பூரில் உள்ள ஒரு கோழிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் கடையில் வேலையை முடித்துவிட்டு மாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். குரும்பூர்- நல்லூர் சாலையில் ஆறுமுகநேரி அருகே சென்ற அவரை 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கி, ரூ.15 ஆயிரம், வெள்ளிக்காப்பு மற்றும் செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்து கொண்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், வீரபாண்டியன்பட்டினம் சாரதி, கூத்தங்குழி மரிய யாசீன், காயல்பட்டினம் திருமூர்த்தி, சாகுல் ஹமீது, அப்துல் சுக்குர் ஆகியோர் சுடலைமுத்துவிடம் வழிப்பறி செய்தது தெரிய வந்தது. அந்த 5 பேரையும் ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்