சாலை அமைக்கும் பணி

சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

Update: 2023-07-19 20:31 GMT

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப்பட்டி, கூத்திப்பாறை, ஆமணக்குநத்தம், ஆத்திபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணிகளையும், வதுவார்பட்டி ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணிகளையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜா மைதீன் பந்தே நவாஸ், சூரியகுமாரி, ஒன்றியக்குழு தலைவர் சசிகலா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அழகு ராமானுஜம், மாவட்ட கவுன்சிலர் பாலசந்தர், ஒன்றிய கவுன்சிலர் பண்டாரச்சாமி, கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகஜோதி, தி.மு.க. பிரமுகர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்