தேங்கி கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம்

ராஜபாளையம் அருகே தேங்கி கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

Update: 2023-04-30 20:41 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே தேங்கி கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

துர்நாற்றம்

ராஜபாளையம் அருகே உள்ள முத்துசாமிபுரம் காளியம்மன் கோவில் தெருவில் ஆங்காங்கே சேகரிக்கப்படும் குப்பைகள் மொத்தமாக கொட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ரேஷன் கடை, தொடக்கப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், அரசு துணை சுகாதார நிலையம், பொது மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய அலுவலகங்கள் உள்ளன.

இவ்வாறு மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில்

மாதக்கணக்கில் குப்பைகள் தேங்கி இருப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

அதிகாரிகள் நடவடிக்ைக

சாக்கடை தூர்வாரப்படாததால் கழிவு நீர் குப்பைகளுடன் கலந்து தெரு முழுவதும் செல்வதால் பொது மக்கள் நடந்து செல்லக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் அருகே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் இருந்துதான் பொது மக்கள் அன்றாடம் குடிப்பதற்கான தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

மழை நேரம் குடிநீரில் புழுக்களும் கலந்து வருவதால் தண்ணீரை குடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளால் பொது மக்கள் அடிக்கடி தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து தேங்கி கிடக்கும் குப்பையை அகற்றுவதுடன் அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்