திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2023-03-11 18:45 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். திருப்பத்தூரில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து திருப்பத்தூர் பஸ் நிலையம் எதிரே உள்ள நினைவுத்தூணில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக திருப்பத்தூர் அருகே கே.வைரவன்பட்டியில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான கோகுல இந்திரா வீட்டின் அருகில் மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்டச்செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர், உதயகுமார், காமராஜ், பாஸ்கரன், கோகுலஇந்திரா, மாவட்ட அவைத்தலைவர் ஏ.வி.நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சிவமணி, வடிவேலு, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் முருகேசன், இரணசிங்கபுரம் ஞானசேகர், கோட்டையிருப்பு ராமசாமி, கலைச்செல்வன், சாமி அன்கோ சுப்பிரமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நவநீதபாலன், லெனின் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்டாலின் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டம்

அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அம்மா திடலில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பேராசிரியை கற்பகம் இளங்கோ, காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், சாக்கோட்டை தெற்கு ஒன்றியசெயலாளர் எஸ்.பி. செந்தில்நாதன், சாக்கோட்டை யூனியன் சேர்மன் சரண்யா செந்தில்நாதன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் முகமது அலி ஜின்னா, சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர். மாசான், கண்டனூர் பேரூர் கழக செயலாளர் சேகர், சாக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் கா.சுப்பிரமணியன், இளைஞர் பாசறை செல்லப்பாண்டி, சாக்கோட்டை வடக்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்பபிரிவு துணை செயலாளர் ஆகாஷ் குணா, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எஸ்.எம்.சின்னத்துரை, சாக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணியன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் தேவன், மாவட்ட இளைஞர் அணி துணைசெயலாளர் குருபாலு, நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், ராம்குமார், பாண்டியராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் சி.கே.நாகராஜன், நகர நிர்வாகிகள் சரவணன், சேட். சிவ முருகன், கபிலன், முருகானந்தம், மகேஸ்வரன், சதீஷ்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உற்சாக வரவேற்பு

முன்னதாக பொதுக்கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் இளையான்குடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பாரதிராஜன், ஒன்றிய குழு துணைத்தலைவர் தனலட்சுமி பாண்டித்துரை, கிழக்கு ஒன்றிய கழகச்செயலாளர் ஜெகதீஸ்வரன், ஒன்றிய துணை செயலாளர் புவனேஸ்வரன், சிவகங்கை மாவட்ட விவசாய பிரிவு துணை செயலாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சண்முகம் ஆகியோருடன் இளையான்குடி ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை உற்சாகமாக வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்