மாயமான மூதாட்டி பிணமாக மீட்பு

மாயமான மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டது.

Update: 2023-03-08 17:53 GMT

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மனைவி மீனாட்சி(வயது 75). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் மாயமான இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு சோளக்காட்டில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்