அரசு சட்டக்கல்லூரி அமைக்க கோரிக்கை
அரசு சட்டக்கல்லூரி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பழமையும், தொன்மையும் வாய்ந்த பகுதியாகவும், ஆண்டாள் பிறந்த புண்ணிய பூமியாகவும் விளங்குகிறது. இங்கு ஆன்மிக தலங்கள் நிறைய உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் பல ஆயிரம் ஆண்டாக நீதி வழங்கப்பட்ட ஊராகவும் இருந்து வருகிறது. சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் மாவட்ட நீதிமன்றம் இ்்ங்கு அமைந்துள்ளது.
இந்தநிலையில் இங்கு அரசு சட்டக்கல்லூரி இல்லை. ஆதலால் தமிழக அரசு இந்த ஆண்டு முதல் அரசு சட்டக் கல்லூரியை ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளதால் அரசு சட்டக்கல்லூரியை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டிடம் கட்டி அதில் கல்லூரியை தொடங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.