அ.தி.மு.க.வில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

கட்சியை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2024-09-21 17:06 GMT

சென்னை,

அண்ணாவின் 116-வது பிறந்த நாளையொட்டி, திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேர் மேற்கில், மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. தி.மு.க. குடும்பத்துக்காக இருக்கும் கட்சி. அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அண்ணா தொடங்கிய தி.மு.க., இன்றைக்கு குடும்பத்துக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆட்சியாளர்களின் சாதனை இதுதான். அ.தி.மு.க. இணையப்போவதாக கூறப்படுகிறது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கட்சியில் இருந்து 4 பேர் நீக்கப்பட்டதுதான். இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள். தொண்டர்கள்தான் அ.தி.மு.க., பொதுக்குழு எடுத்த முடிவுதான் இறுதியானது.

2026-ல் அ.தி.மு.க. தலைமையில் வருவான கூட்டணி அமையும். தி.மு.க. கூட்டணியில் இப்போது புகைய ஆரம்பித்து இருக்கிறது. அடுத்து நெருப்பு பற்றும். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும். அ.தி.மு.க. ஆட்சியை அமைப்போம்" இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்