சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-08 19:25 GMT


விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் கிராமத்தில் வடக்கு பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் முற்றிலும் சேதமடைந்து எப்போதும் கீழே விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. அதேபோல ஊரின் மையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஊர் மக்களின் பாதுகாப்பிற்காக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு மாதங்கள் பலவாகியும் திறக்கப்படாமல் உள்ளது. மேலும் கிளை நூலக கட்டிடமும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் அச்சத்துடனே வரும் சூழ்நிலை உள்ளது. கோவில் ஊருணியின் பாதுகாப்பு சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதமடைந்து விழுந்து கிடக்கிறது. எனவே ஊர் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை விரைவாக சீரமைக்கவும், புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், நூலக கட்டிடத்தை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்