சேதமடைந்த மின்கம்பங்களை அகற்ற கோரிக்கை

சேதமடைந்த மின்கம்பங்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-07 22:07 GMT

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை தேவா டெக்ஸ் காலனியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தேவா டெக்ஸ் 2-வது தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பம் மிகவும் ேசதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலமான காற்று வீசினால் மின்கம்பம் கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தியேட்டர் மேம்பாலம் அருகே ஆர்.சி சர்ச் எதிரில் உள்ள மின்கம்பமும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்கள் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்