தேவகோட்டை நகராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த கோரிக்கை
தேவகோட்டை நகராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவகோட்டை
மாங்குடி எம்.எல்.ஏ. சிவகங்கை மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தேவகோட்டை நகராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளிகளே கிடையாது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள் மட்டுமே உள்ளது. உங்கள் தொகுதியில் முதல்வர் அறிவித்த திட்டங்களின் அடிப்படையில் 22.8.2022 தமிழக முதல்வரின் கடிதத்தின்படி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தேவகோட்டை நகராட்சி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியை அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தர வேண்டும். இது சம்பந்தமாக சட்டபேரவை கூட்டத்தொடரிலும் பேசியுள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.