புதுக்கோட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இலுப்பூர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த உஷா நந்தினி ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், மாத்தூர் இன்ஸ்பெக்டராக இருந்த கோபாலகிருஷ்ணன் புதுக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டராகவும், டவுன் இன்ஸ்பெக்டர் குருநாதன் அறந்தாங்கி இன்ஸ்பெக்டராகவும், கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மணமேல்குடி இன்ஸ்பெக்டராகவும், வடகாடு இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி கீரமங்கலம் இன்ஸ்பெக்டராகவும், தொட்டியம் இன்ஸ்பெக்டர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா இலுப்பூர் இன்ஸ்பெக்டராகவும், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாரிமன்னன் வடகாடு இன்ஸ்பெக்டராகவும், அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் இன்ஸ்பெக்டர் சத்யா கே.புதுப்பட்டி இன்ஸ்பெக்டராகவும், திருச்சி மாவட்டம் மணப்பாறை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மணமாலை புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.