மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

Update: 2023-02-04 18:45 GMT

ஓ.எஸ். மணியன்  எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பெய்த கனமழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகி உள்ளனர். வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதற்கு பல நாட்கள் ஆகும்.

எனவே மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் காப்பீடு திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். மழையால் சேதமடைந்த பயிர்களை வேளாண்மை துறையினர் வந்து பார்க்கவே இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேதாரண்யம்

முன்னதாக வேதாரண்யம் தாலுகா பிராந்தியங்கரை, கரியாபட்டினம், ஆதனூர், கருப்பம்புலம் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் இறங்கி சேதமடைந்த நெற்பயிர்களை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று சொல்லி உள்ளார் என எம்.எல்.ஏ.விடம் கேட்டதற்கு, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று சொல்பவர் அரசியல்வாதியாக இருந்தால் நடப்பு தெரியும் போது, உண்மை தெரியும் போது, பெரும்பான்மை தெரியும் போது மரியாதையாக விட்டுக்கொடுத்து இருக்கலாமே. கோர்ட்டுக்கு செல்ல வேண்டியது இல்லையே என்றார். அப்ேபாது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், கிரிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்