ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-09-27 18:36 GMT

தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்க கூட்டம்

மயிலாடுதுறையில் காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கோபி கணேசன் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் ரமேஷ், வெள்ளைத்துரை, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-.

தமிழக சட்டமன்ற தொகுதி ஒவ்வொன்றிலும் நீண்ட காலமாக தீர்க்கப்படாத 10 முக்கிய பிரச்சினைகள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

ரூ.25 ஆயிரம் நிவாரணம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய பிரச்சினையாக கொள்ளிடம் ஆற்றில் கரைகள் உடைந்து கடலில் கலக்கும் அளவிற்கு தண்ணீர் விடப்பட்டும், டெல்டா பகுதிகளில் குளம், குட்டை, ஏரிகள் நிரப்பப்படவில்லை என்பதை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும்.

கடந்த 2021-ம் ஆண்டுக்கான பயிர் இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். தொடர் மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.

பயிர் காப்பீட்டு தொகை

கடந்த ஆண்டிற்கான சம்பா பயிர் காப்பீட்டு தொகையையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்