நீரில் மூழ்கி பலியான 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்

கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நீரில் மூழ்கி பலியான 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் கலெக்டர் வழங்கினார்

Update: 2022-08-22 18:25 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று அவர்களிடமிருந்து 49 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 336 மனுக்களையும் பெற்றுக்கொண்டார். பின்னர் இந்த மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் நீரில் மூழ்கி பலியான சங்கராபுரம் தாலுகா மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் கவுதம், மணி மகன் தீபக், சங்கராபுரம் தாலுகா தும்பை கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார். முன்னதாக காது கேளாத மாற்றுத்திறனாளி 5 பேருக்கு செல்போன் மற்றும் காதொலி கருவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்