30 பேருக்கு நிவாரண உதவி

புளியங்குடியில் நாய் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேருக்கு நிவாரண உதவி- நகராட்சி தலைவி வழங்கினார்

Update: 2022-06-14 13:40 GMT

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நேற்று முன்தினம் 30- க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுபற்றி தகவலறிந்த புளியங்குடி நகராட்சி தலைவி விஜயா சவுந்தரபாண்டியன் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றவர்களையும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களையும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது தி.மு.க மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சாகுல்ஹமீது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைத்தலைவர் அப்துல் ரகுமான், நகராட்சி கவுன்சிலர்கள் முகைதீன் அப்துல் காதர், அப்துல் காதர் மற்றும் பலர் உடன் இருந்தனர். இந்தநிலையில் நகராட்சி தலைவியின் உத்தரவின்பேரில், பொதுமக்களை கடித்த நாயை நகராட்சி ஊழியர்கள் கண்டறிந்தனர். அந்த நாயையும், மேலும் தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களையும் பிடித்து புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்