குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தப்பிய2 சிறுமிகள் நாகப்பட்டினத்தில் மீட்பு
குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தப்பிய 2 சிறுமிகள் நாகப்பட்டினத்தில் மீட்கப்பட்டனர்.
சிவகங்கையில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியிருந்த தேவகோட்டை அருகே வெள்ளிக்கட்டி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி மற்றும் காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஆகிய இருவரும் கடந்த 2-ந்தேதி பின்புற சுவரில் ஏறி குறித்து தப்பினர். இது குறித்து காப்பக பொறுப்பாளர் ஜெயா கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை தேடி வந்தனர். மேலும், சிறுமிகளை கண்டுபிடிக்க நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் விசாரணையில் நாகப்பட்டினம் அருகே கீழ்வேலூர் கிராமத்தில் ஒரு சிறுமியின் உறவினர் வீட்டில் 2 சிறுமிகளும் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமிகளை மீட்டு சிவகங்கை அழைத்து வந்தனர்.