ஆன்லைன் லிங்க் மூலம் வாலிபர் இழந்த ரூ.2 லட்சம் மீட்பு

பகுதிநேர வேலை தருவதாக கூறியதை நம்பி ஆன்லைன் லிங்க் மூலம் வாலிபர் இழந்த ரூ.2 லட்சம் மீட்பு சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை

Update: 2023-03-09 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லை அடுத்த இரும்பை கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் மகன் ஹரிஷ் சந்திரா (வயது 35). இவருடைய செல்போனுக்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும், அதற்கு முன்பணம் செலுத்தக்கோரியும் டெலிகிராம் மூலம் ஒருவர் லிங்க் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த லிங்க்கில் சென்று சிறிது, சிறிதாக 3 தவணையாக ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். ஆனால் வேலை ஏதும் தராமல், பணத்தை ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மேற்கண்ட பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை முடக்கம் செய்து ஹரிஷ் சந்திராவின் வங்கி கணக்கில் இருந்து அனுப்பப்பட்ட ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மீட்கப்பட்டது. இதையடுத்து ஹரிஷ்சந்திராவை நேரில் அழைத்து அவருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கான காசோலையை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகோவிந்தராஜ் தலைமையில் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்