விழிப்புணர்வு பேரணி

நம்ம ஊரு சூப்பரு என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-05-01 18:45 GMT

திருப்புல்லாணி யூனியன் திருஉத்தரகோசமங்கை ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நம்ம ஊரு சூப்பரு, எங்களது கிராமம் எழில் மிகு கிராமம் என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமையேற்று விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

பேரணியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சியில் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த பேரணியில் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் எவ்வாறு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து தெருக்களில் உள்ள குப்பைகளை மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த பேரணியில் திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, ஊராட்சி உதவி இயக்குனர் பரமசிவம், திருப்புல்லாணி யூனியன் ஆணையாளர்கள் ராஜேந்திரன், கணேஷ் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்