ராஜபாளையம்.
தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நீதிபதிகள் உத்தரவின் பேரில் ராஜபாளையம் சட்டப்பணி குழு தலைவர் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுமதி தலைமையில் சமரச தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் குமார், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் ஜெகஜீவன் ராம், ராஜூக்கள் கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். ஊர்வலம் காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து ஒருங்கிணைந்த நீதிமன்றம் வரை மேற்கொள்ளப்பட்டது.