கோபி அருகே உள்ள சின்னநாயக்கன்புதூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அதன் அலுவலகம் அருகே பால் விலையை உயர்த்தி தரக்கோரி கருப்புக்கொடி ஏந்தியும், கருப்பு பட்டை அணிந்தும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் நஞ்சப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பசு மாட்டு பால் லிட்டருக்கு ரூ.42 ஆகவும், எருமை பாலுக்கு ரூ.51 ஆகவும் உயர்த்தி தரவேண்டும் என கோஷமிட்டனர். இதில் துணைத்தலைவர் சென்னியப்பன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.