தண்டவாள பராமரிப்பு பணி:ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் நாளை ரத்து
தண்டவாள பராமரிப்பு பணி:காரணமாக ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் நாளை ரத்துசெய்யப்பட்டுள்ளது
ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஜோலார்பேட்டைக்கு (வண்டி எண் 06412) ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ெரயில் ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடையும். இதேபோல் ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோட்டுக்கு வரும் ரெயில் (வண்டி எண் 06411) ஜோலார்பேட்டையில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 7.45 மணிக்கு வரும்.
இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் ரெயிலும், ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரும் ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.