மேல்நிலை கல்வி வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது

மேல்நிலை கல்வி வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.

Update: 2023-09-15 19:12 GMT

காலாண்டு தேர்வு

தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு தொடர்பான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் தமிழகம் முழுவதும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு 15-ந் தேதி முதலும், 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி முதலும் காலாண்டு தேர்வு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நேற்று முதல் தொடங்கின. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மேல்நிலை கல்வி வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு தொடங்கின.

இதில் காலையில் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடத்தேர்வும், மதியம் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடத்தேர்வும் நடைபெற்றது. இதனை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர். தேர்வு தொடர்ந்து வருகிற 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

தொடக்க கல்வி

இதேபோல் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு காலையிலும், 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியத்திலும் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு வருகிற 27-ந் தேதியுடன் நிறைவடைகிறது. தொடக்க கல்வியில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நேற்று தொடங்குவதாக இருந்தது. இதில் ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் சர்வர் கோளாறு காரணமாக நேற்று தேர்வு தொடங்கப்படவில்லை. வருகிற 19-ந் தேதி முதல் தேர்வு தொடங்குவதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்