திருவெண்ணெய்நல்லூர் அருகே புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொத்தனூர் புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை அமைத்து யாக பூஜைகள், கணபதி ஹோமம், அனுக்கை பூஜை, நவக்கிரக ஹோமம், கோபூஜை லட்சுமி குபேர பூஜை, தான்ய பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், 4 கால யாக பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்றன.
பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று புத்துமாரியம்மன், செல்வகணபதி, பூரணி, புஷ்கலா சமேத அய்யனாரப்பன் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கொத்தனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.