விருதுநகரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என நுகர்வோர் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-09-07 22:27 GMT


விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என நுகர்வோர் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நுகர்வோர் குழு கூட்டம்

விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அளவிலான நுகர்வோர் குழு கூட்டம் கமிஷனர் லீனா சைமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி என்ஜினீயர் எட்வின்ஜோஸ் பிரைட், நகரமைப்பு ஆய்வாளர் ரூபா, சுகாதார அலுவலர் இளங்கோ, குழு உறுப்பினர்கள் அழகு சுந்தரம், மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் குழு உறுப்பினர் அழகு சுந்தரம், விருதுநகர் ெரயில்வே பீடர் ரோடு, பழைய பஸ் நிலைய ரோடு ஆகிய சாலைகள் சேதமடைந்த நிலையில் அதனை சீரமைக்க வேண்டும்.

புதிய பஸ் நிலையம்

பழைய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். பஸ் கால அட்டவணை வைக்க வேண்டும்.

புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதி அளித்தார். மேலும் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த நகர்ப்புற தீவிர தூய்மை இயக்கம் முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்