மக்கள் தொடர்பு திட்டம் முகாம் 7-ந்தேதிக்கு மாற்றம்
காடியாரில் நடைபெற இருந்த மக்கள் தொடர்பு திட்டம் முகாம் 7-ந்தேதிக்கு மாற்றம் கலெக்டர் தகவல்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள காடியார் கிராமத்தில் அடுத்த மாதம்(மார்ச்) 8-ந் தேதி(புதன்கிழமை) கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சியில் திருத்தம் செய்யப்பட்டு மார்ச் 7-ந் தேதி(செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு முகாம் நடைபெறும் எனவும், மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அதற்கென்று நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்டவாறு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.