குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக்கூடாது கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக்கூடாது என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2023-08-05 18:45 GMT

குறிஞ்சிப்பாடி அருகே அன்னதானம்பேட்டை ஊராட்சி பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

குறிஞ்சிப்பாடி ஒன்றியம் அன்னதானம்பேட்டை மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. அதை மூடக்கோரி பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால், அந்த கடை மூடப்பட்டது. அப்போது அரசு அதிகாரிகள், இனி இங்கு டாஸ்மாக் கடை செயல்படாது என்று உறுதி அளித்தனர். மேலும் கடையில் உள்ள அனைத்து மதுபாட்டில்களையும் வேறு இடத்திற்கு மாற்றி விடுவதாகவும் கூறினர்.

இந்நிலையில் மீண்டும் மூடப்பட்ட அதே இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அரசு அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள். எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை தேவையில்லை. ஆகவே இந்த கடையை மீண்டும் திறக்கக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்ற கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்