கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2023-09-05 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் பொதுமக்களுக்கு கண் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண் தான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை டாக்டர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் நேதாஜி பைபாஸ் ரோடு, நாச்சியப்ப கவுண்டர் தெரு வழியாக தர்மபுரி வாசன் கண் மருத்துவமனை அருகில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி மாணவிகள், வாசன் கண் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு கண் தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கண் தானம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு கையெழுத்து போட்டு பிரசாரம் மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்