மேஜை பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மேஜை பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து தென் மண்டல அளவிலான மேஜை பந்து போட்டிகள் சவுடாம்பிகா என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜாகிர் உசேன், முன்னாள் ஒன்றியகுழுத்தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணை தலைவர் பழனிச்சாமி, தி.மு.க. நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம், வார்டு செயலாளர் டேனியல், கல்லூரி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கோகுல் செய்திருந்தார்.