தமிழ் மொழி, தமிழரின் பண்பாட்டை உலக அளவில் பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு
பிரதமர் மோடிக்கு 65 கிலோ எடை கொண்ட மாலையை கூட்டணி கட்சி தலைவர்கள் அணிவித்தனர்.
திறந்த வெளி வாகனத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, இருபுறமும் திரண்டு இருந்த தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி வந்தார். வாகனத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் நின்றனர்.
“தமிழ்நாட்டில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்ற நிலை மாறி எங்கும் இருக்கிறது என்ற நிலை உள்ளது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்கக, ஒழுக்கமும் நேர்மையும் உண்மையும் சார்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்டுள்ள காமராஜர் மக்கள் கட்சி பாடுபடும்”
-பல்லடம் பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழருவி மணியன் பேச்சு
பல்லடத்தில் நடைபெற்று வரும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன், தமிழருவி மணியன், ஏ.சி சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வருகை தந்தார் பிரதமர் மோடி: சற்று நேரத்தில் மாதப்பூரில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
திருப்பூரை அடுத்த பல்லடம் மாதப்பூரில் சற்று நேரத்தில் நடைபெற உள்ள ‘என் மண் என் மக்கள் பாதயாத்திரை’ நிறைவு பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.