மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, மதுரைக்கு வருகை தந்துள்ளார்.;
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து தரிசனம் செய்தார். மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி 2-வது முறையாக தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது
மதுரையில் டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்
திருப்பூர் பல்லடத்தில் பிரதமர் மோடியை ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா சந்தித்து பேசினார். அப்போது கசண்ட்ரா பாடிய அண்ணாமலையார் பாடலை தாளமிட்டு பிரதமர் மோடி ரசித்தார்.
தமிழகத்தை சுரண்டுவதற்காகவே இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளார்கள். காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடவில்ல. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை கொடுத்தார்.
இந்தியா கூட்டணி தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படுவதற்கான பணிகளை செய்ய மாட்டார்கள். முத்ரா கடன் வசதி திட்டம் மூலம் தமிழகத்திற்கு 2 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்தால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களும் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள்- பிரதமர் மோடி
பா.ஜ.க. மீது தமிழகத்தில் பெரும் நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க.வின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பா.ஜ.க. முன்னுரிமை கொடுத்து வருகிறது.
2004- முதல் 2014 வரை தமிழகத்திற்கு காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு எதுவுமே செய்யவில்லை. இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி செய்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.; அதனால்தான் அவர் இன்றும் நினைத்து பார்க்கப்படுகிறார். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும்.தமிழகத்தில் தி.மு.கவால் அரசியலுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது- பிரதமர் மோடி
தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கிரிக்கிறது. காசி தமிழ் சங்கமம், செங்கோல் இவற்றின் வழியாக தமிழுக்கு மரியாதை செலுத்தி வருகிறேன். என்னை பொருத்தளவில் தமிழ் கலாசாரமும், தமிழ் மொழியும் மிக சிறப்பானதாக இருக்கிறது. நாடு தான் முதன்மையானது என பாஜக கருதுகிறது.
என் மண்.. என் மக்கள் யாத்திரை தமிழகத்தை ஒரு புதிய பாதையில் எடுத்து செல்கிறது. 1991-ல் நான் ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய போது, கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினேன். தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளை கொண்டது. கன்னியாகுமரி மண்ணை நெற்றியில் பூசிக்கொண்டு என்னுடைய யாத்திரையை தொடங்கினேன்.- பிரதமர் மோடி பேச்சு
என் மண்..என் மக்கள் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அதன் விவரங்கள் வருமாறு:
வணக்கம் என சொல்லி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.
ஜவுளித்துறையில் சிறப்பு வாய்ந்த நகரமாக திருப்பூர் உள்ளது
மிகப்பெரிய அளவில் இங்கு கூடியுள்ள மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும் போது காவிக்கடலை பார்ப்பது போல உள்ளது.
கொங்கு மண் தொழில் துறையில் முக்கிய பங்காற்றி வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் இந்த பகுதி மிக முக்கியமானது.
உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்கி வருகிறது.
இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
திருப்பூர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் அண்ணாமலையின் “என் மண்.. என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். கூட்டத்தில் அண்ணாமலை பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு;
- தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற காரணமாக இருந்தவர் மோடிதான்
- பல்லடம் பொதுக்கூட்டம் சரித்தர முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும்
- மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார்.
- 400 இடங்களுக்கு மேல் பா.ஜ.க கைப்பற்றுவதற்கு தமிழகத்தில் 39 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்
- இவ்வாறு அவர் கூறினார்.