தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆசிரியர் கூட்டணியின் குளித்தலை வட்டாரத் தலைவர் பழனிவேலு தலைமை தாங்கினார்.
இதில் கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பிரதிநிதி மணிகண்டன் வரவேற்றார். முடிவில் வட்டாரப் பொருளாளர் தேக்கமலை நன்றி கூறினார்.