சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

Update: 2023-08-13 18:45 GMT

மன்னார்குடி, திருமக்கோட்டை, குடவாசலில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி

மன்னார்குடியில் உள்ள அண்ணாமலை நாதர் கோவில், காமாட்சியம்மன் கோவில், நீலகண்டேசுவரர் கோவில், கைலாசநாதர் கோவில், மீனாட்சியம்மன் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், ஜெயங்கொண்ட நாதர் கோவில், பாமணி நாகநாதசாமி கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிவன் மற்றும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமக்கோட்டை

அதேபோல் திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி ஞானபுரீஸ்வரருக்கும், நந்திக்கும் பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரே நேரத்தில் சிவனுக்கும், நந்திகேஸ்வரருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

குடவாசல்

குடவாசல் திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்தி பகவானுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பெருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.

சீதக்கமங்கலம் மூலநாதர் கோவிலில் நந்திபகவானுக்கு கோவில் அர்ச்சகர் சிவய்யா சிவாச்சாரியார் தலைமையில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கங்காதரன் மற்றும் பிரதோஷ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

குடவாசல் கோணேஸ்வரர் கோவில், சத்ருசம்ஹார மூர்த்தி கோவில், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில், கூந்தலூர் ஜம்புகாரண்யேஸ்வரர் கோவில், சற்குணேஸ்வரபுரம் சற்குணேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்து.

Tags:    

மேலும் செய்திகள்