விழுப்புரம்
விழுப்புரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட வி.அகரம் மின்னூட்டியில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காகுப்பம், கிழக்கு சண்முகபுரம் காலனி, திருநகர், லட்சுமி நகர், மகாராஜபுரம், ஆசிரியர் நகர், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, எருமனந்தாங்கல், தொடர்ந்தனூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இதேபோல் ஜானகிபுரம் பீடரில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 7 மணி முதல் 10 மணி வரை திருச்சி மெயின்ரோடு, நாராயணன் நகர், கே.கே.நகர், சாலாமேடு, வழுதரெட்டி காலனி, என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஆடல் நகர், பாண்டியன் நகர், ஜானகிபுரம், பெரியார் நகர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.