விழுப்புரம்
விழுப்புரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட நகரம் மின்னூட்டியில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே.சாலை, வி.மருதூர், நரசிங்கபுரம், கந்தசாமி லே-அவுட், பார்த்தசாரதி லே-அவுட், வில்லியம் லே-அவுட், ஆறுமுகம் லே-அவுட், எஸ்.பி.எஸ். நகர், எஸ்.ஐ.எஸ். நகர், கணேஷ் நகர், கவுதம் நகர், நண்பன் நகர், ராஜீவ்காந்தி நகர், அண்ணா நகர், மணிநகர், ஸ்ரீனிவாசா நகர், திரு.வி.க. சாலை, பூந்தோட்டம், நேருஜி சாலை ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.