நாகை துணைமின்நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பரவை, பாப்பாகோவில், புதியகல்லாறு, கருவேலங்கடை, அந்தனபேட்டை, புதுச்சேரி, ஆவராணி, ஒரத்தூர், கரைஇருப்பு, வடுகச்சேரி, ஆலங்குடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகை உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.