ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
குத்தாலத்தில் ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
குத்தாலம்;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ம.தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் குத்தாலம் ஆசைதம்பி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கொளஞ்சி, சரவணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் கருணாநிதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அரசியல் ஆய்வு மைய செயலாளர் நெய்வேலி மு.செந்திலதிபன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்த ஏ.வி.சி. கல்லூரி மாணவி அபிநயாவுக்கு ஒளிச்சுடர் விருது வழங்கப்பட்டது. .முடிவில் குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வாசு நன்றி கூறினார்.