இடப்பிரச்சினையில் போலீசார் விசாரணை

இடப்பிரச்சினை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2023-01-17 19:45 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி காலனி தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி பிச்சையம்மாள். இவரது மகன் பாலமுருகனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் பெருமாள் மகன்கள் தம்பிதுரை, நெடுமாறன், தர்மலிங்கம் ஆகியோருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதற்கிடையில் பாலமுருகன் தனது இடத்தினை சுத்தம் செய்து சர்வேயர் வைத்து இடத்தை அளக்கும்போது, எதிர் தரப்பினர்களான தம்பிதுரை, நெடுமாறன், தர்மலிங்கம் ஆகியோர் சேர்ந்து இடம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது எப்படி அளக்கலாம் எனக்கூறி கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் தனித்தனியாக உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி, இடப்பிரச்சினை என்பதால் நீதிமன்றம் மூலம் தான் தீர்வு கிடைக்கும், அதனால் நீங்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தீர்ப்பு வரும் வரை காத்திருங்கள் எனக்கூறி அனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்